Tuesday, August 22, 2006

ஆண்டாள் அருளிச்செய்த "திருப்பாவை"

ஆண்டாள்
 
தனியன்கள் 

நீளாதுங்கஸ்தநகிரிதடீ சுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:
 
அன்னவயற்புதுவையாண்டாடாளரங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல்பதியம் -- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
 
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்! -- நாடி நீ
வேங்கடவற்கென்னைவிதியென்றவிம்மாற்றம்
நாம்கடவாவண்ணமே நல்கு 
   
பாசுரங்கள் தொடக்கம்
 
*மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்!
கூர்வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனே நமக்கேபறைதருவான்
பாரோர்புகழப்படிந்தேலோரெம்பாவாய் --- (1)
 
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி நெய்யுண்ணோம்
பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய் ---(2)
 
*ஓங்கியுலகளந்த வுத்தமன்பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீராடினால்
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்பத்
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி - வாங்கக்,
குடம்நிறைக்கும் வள்ளற்பெரும்பசுக்கள்
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். ---(3)
 
ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல்மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து
தாழாதே நார்ங்கமுதைத்தசரமழைபோல்
வாழவுலகினில்பெய்திடாய் நாங்களும் -
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய். ---(4)
 
மாயனை மன்னுவடமதுரைமைந்தனைத்
தூயபெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர்குலத்தினில்தோன்றுமணிவிளக்கைத்
தாயைக்குடல்விளக்கஞ்செய்த தாமோதரனைத்
தூயோமாய்வந்துநாம் தூமலர்கள் தூய்த்தொழுது
வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்கப்
போயபிழையும் புகுதருவானின்றனவும்
தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய். ---(5)
 
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன்கோயில்
வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும்
மௌ;ளஎழுந்தரியென்றபேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். ---(6)
 
கீசுகீசென்றெங்குமானைச்சாத்தன், கலந்து -
பேசினபேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து
வாசநறுங்குழலாய்ச்சியர், மத்தினால் -
ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ
நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி
கேசவனைப்பாடவும்நீ கேட்டேகிடத்தியோ
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய். --(7)
 
கீழ்வானம்வெள்ளென்றெருமைசிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போகின்றாரைப் போகாமல்காத்து, உன்னைக் -
கூவுவான்வந்துநின்றோம், கோதுகலமுடைய -
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்.. ---(8)
 
தூமணிமாடத்துச் சுற்றும்விளக்கெரியத்
தூபம்கமழத் துயிலணை மேல்கண்வளரும்
மாமான்மகளே! மணிக்கதவம்தாள் திறவாய்
மாமீரவளையெழுப்பீரோ?, உன்மகள்தான் -
ஊமையோஅன்றிச் செவிடோஅனந்தலோ
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன்மாதவன் வைகுந்தனென்றென்று
நாமம்பலவும் நவின்றேலோரெம்பாவாய்.. ---(9)
 
நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல்திறவாதார்
நாற்றத்துழாய்முடி நாராயணன், நம்மால் -
போற்றப்பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள் -
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ
ஆற்றவனந்தலுடையாயருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்மாவாய். --- (10)
 
கற்றுக்கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமாரெல்லாரும்வந்து, நின் -
முற்றம் புகுந்து முகி;ல்வண்ணன் பேர்பாடச்
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி!, நீ -
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய். ----(11)
 
கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய் ---(12)
 
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லவரக்கனைக்
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய்ப்
பிள்ளைகளெல்லோரும் பாவைக்களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்
குள்ளக்குளிரக் குடந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்! --------(14)
 
உங்கள் புழக்கடைத் தோட்டத்துவாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்தாம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர்
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான்போதந்தார்
எங்களை முன்னமெழுப்பாவான் வாய்பேசும்
நங்காயெழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடுசக்கரமேந்தும் தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய் -- (15)
 
எல்லேயிளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லை நீபோதாயுனக்கென்னவேறுடையை
எல்லாரும்போந்தாரோ போந்தார்போந்தெண்ணிக்கொள்
வல்லானைக்கொன்றானை மாற்றாரைமாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோரெம்பாவாய். ------(16) 
 
*நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய -
கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண -
வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை-
மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான்
து}யோமாய்வந்தோம் துயிலெழகப்பாடுவான்
வாயால்முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பர்வாய். ---------(16)
 
அம்பரமே தண்ணீரே சோறேயறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாயறிவுறாய்
அம்பரமூடறுத்து ஓங்கியுலகளந்த
உம்பர்கோமானே உறங்காதெழுந்திராய்
செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய். ------- (17)
 
*உந்துமதகளிற்றனோடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம்கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண், மாதவிப் -
பந்தல்மேல் பல்கால் குயிலனங்கள் கூவினகாண்
பந்தார்விரலியுன் மைத்துனன்பேர்பாடச்
செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். ------(18)
 
குத்துவிளக்கெறியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங்கண்ணினாய்! நீயுன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய். ---------(19)
 
முப்பத்துமூவர் அமரர்க்குமுன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்!, செற்றார்க்கு -
வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்னனெம்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதேயெம்மை நீராட்டேலோரெம்பாவாய். ------(20)
 
ஏற்றகலங்கள் எதரிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய், உலகினில் -
தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றாருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாதுவந்துன்னடிபணியுமாப்போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.--(21)
 
அங்கண்மாஞாலத்தரசர் அபிமான -
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டும்கொண்டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல்சாபமிழிந்தேலோரெம்பாவாய். -------(22) 

*மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரியசிங்கமறிவுற்றுதத தீவிழித்து
வேரிமயிர்பொங்கவெப்பாடும் பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டுப்
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! உன் -
கோயில்நின்றிங்கனே போந்தருளக், கோப்புடைய -
சீரியசிங்காசனத்திருந்து யாம்வந்த -
காரியமாராய்ந்தருயேலோரெம்பாவாய். ------(23)  

*அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி
பொன்னச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி
கன்றுகுணிலாவெறிந்தாய்! கழல்போற்றி
குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி
என்றென்றென்றுன் சேவகமே ஏத்திப்பறைகொள்வான்
இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய். ----(24) 
 
ஒருத்திமகனாய்பிறந்து ஓரிரவில்
ஒருத்திமகனாய் ஒளித்துவளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்குநினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞசன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை -
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்கசெல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய். ------(25) 
 
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்கமுரல்வன
பாலன்னவண்ணத்துன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோலவிளக்கே கொடியேவிதானமே
ஆலினிலையாய் அருளேலோரெம்பாவாய். -----(26)

 
*கூடாரைவெல்லும் சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்-
பாடிபறைகொண்டு யாம்பெருசம்மானம்
நாடுபுழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமேயென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போமதன்பின்னே பாற்சோறு -
மூட, நெய்பெய்து முழங்கைவழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். -----(27)

 
*கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத வாய்க்குலத்து, உன்றன்னைப்-
பிறவிபெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா!, உன்றன்னோ-
டுரவேல் நமக்கிங்கொழிக்கவொழியாது
அறியாத பிள்ளைகளோம், அன்பினாலுன்றன்னைச் -
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோரெம்பாவாய். ----(28) 
 
*சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்-
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப்பறைகொள்வானன்றுகாண் கோவிந்தா
எற்றைக்குமேழேழ் பிறவிக்கும், உன்தன்னோடு-
உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம்
மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். ------(29)
 
*வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறைகொண்டவாற்றை அணிபுதுவைப் --
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார்ரீரண்டு மால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்றின்புறுவரெம்பாவாய் ---- (30)
 
 

* இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும்
 
அடிவரவு:- மார்கழி, வையம், ஓங்கி, ஆழி, மாயன், புள்ளு, கீசு, கீழ்வானம், து}மணி
நோற்று, கற்று, கனைத்து, புள்ளின், உங்கள், எல்லே, நாயகன், அம்பரம், உந்து,
குத்து, முப்பத்து, ஏற்ற, அங்கண், மாரி, அன்று, ஒருத்தி, மாலே, கூடாரை, கறவை
சிற்றம், வங்கம். - தை
 
 

திருப்பள்ளியெழுச்சி - Thiruppaliyezhuchi


தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்தது
தனியன்கள் 
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீ;ர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் -- வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.
 
தமேவமத்வா பரவாஸ{தேவம்
ரங்கேசயம் ராஜவ தர்ஹணீயம்
ப்ராபோதிகீம் யோhக்ருத ஸ_க்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
 
   
பாசுரங்கள் தொடக்கம்
 
*கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனரிவரொடும்புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடுமுரசும்
அதிர்தலிலலைகடல்போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --- (1)
 
கொழுங்கொடிமுல்லையின் கொழுமலரணவிக்
கூர்ந்தது குணதிசைமாருதமிதுவோ
எழுந்தன மலரணைப்பள்ளிகொள்ளன்னம்
ஈன்பனி நனைந்த தமிருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கியவானையின் அருந்துயர்கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(2)
 
சுடரொளிபரந்தன சூழ்திசையெல்லாம்
துன்னியதாரகை மின்னொளிசுருங்கிப்
படரொளிபசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருளகன்றது பைம்பொழிற்கமுகின்
மடலிடைக்கீறி வண்பாளைகள்நாற
வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ
அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(3)
 
மேட்டிளமேதிகள் தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும்
ஈட்டியவிசைதிசை பரந்தனவயலுள்
இரிந்தன சுரும்பினமிலங்கையர் குலத்தை
வாட்டியவரிசிலை வானவரேறே!
மாமுனிவேள்வியைக் காத்து, அவபிரத--
மாட்டியவடுதிரலயோத்தியம்மரசே!
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(4)
 
புலம்பினபுட்களும் பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல் புகுந்ததுபுலரி
கலந்தது குணதிசைக்கனைகடலரவம்
களிவண்டுமிழற்றிய கலம்பகம்புனைந்த
அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான்
அமரர்கள்புகுந்தனராதலிலம்மா!
இலங்கையர்கோன்வழிபாடு செய்கோயில்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே. ---(5)
 
இரவியர் மணிநெடுந் தேரொடுமிவரோ
இறையவர் பதினொருவிடையருமிவரோ
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும் வசுக்களும் வந்துவந்தீண்டிப்
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டியவெள்ளம்
அருவரையனைய நின் கோயில்முன்னிவரோ
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(6)
 
அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதருமிவரோ
இந்திரனானையும் தானும் வந்திவனோ
எம்பெருமான்! உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நு}க்க
இயக்கரும் மயங்கினர் திருவடித்தொழுவான்
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --(7)
 
வம்பவிழ் வானவர் வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண் கண்ணாடிமுதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன்முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனரிவரோ
தோன்;றினனிரவியும் துலங்கொளிபரப்பி
அம்பரதலத்தினின்றகல்கின்றதிருள்போய்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(8)
 
*ஏதமில்தண்ணுமையெக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோடிசைதிசை கெழுமிக்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(9)
 
*கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து
தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் --
அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. --- (10)
 
அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி.
 
* இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும்
 
 
Also available in dynamic Tamil font at below URL.
http://www.ahobilam.com/tamil/divya-prabandam/thirupalliyezhuchi.htm

--
If you are not able to see the Tamil text.:
Use xp or higher, Change your browsers encoding to "Unicode - UTF-8", Use outlook 6.0 or higher.

பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு - Periyazhavar's Thiruppallandu.

திருப்பல்லாண்டு

தனியன்கள்



குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம:
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷhத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.
(பாசுரங்கள் தொடக்கம்)

* பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.

* அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ
நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே.

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக்குலத்தைத்தவிந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.

எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தாவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்;றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி -
பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமும்மத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.

உடுத்துக்களைந்தநின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருதித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட-
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய -
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.

*அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன், அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப்படிவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப்
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்பல்லாண்டுகூறுவனே.

* பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச், சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
பல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருதேத்துவர்பல்லாண்டே.



* இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும்



அடிவரவு:- பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை தீ நெய் உடுத்து
எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு (இதை நினைவில் கொண்டால்
அடுத்தடுத்த பாசுரங்களை தட்டுக்கெடாமல் சொல்லலாம்).
அதுபோல் இந்த பல்லாண்டில் மட்டும் பாசுர முடிவும் குழப்பமே.
அதனால் கீழ்வரிகளைக்கொண்டு அதை நினைவிருத்தலாம்.



ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின், அண்டம் என்மின், எந்தை பாடுதும், தீ-உடுத்து-எந்நாள் கூறுதும், நெய்யும்-அல்லும் கூறுவனே.
3ம் பாசுரம் - ஆதி: கூறுதுமே. அதற்கடுத்து 4ல்: கூறுமினே
அதற்கடுத்து அண்டம்: என்மினே. அடுத்து: பாடுதுமே
நெய்-அல்லும் என்ற இரு பாசுரம் : என்மினே என்றும்
தீ-உடுத்து-எந்நாள் இம் மூன்றும் கூறுதுமே என்றும் முடிகின்றன.

This is also available in dynamic Tamil font at the following URL.

http://www.ahobilam.com/tamil/divya-prabandam/thirupallandu.htm
--
If you are not able to see the Tamil text.:
Use xp or higher, Change your browsers encoding to "Unicode - UTF-8", Use outlook 6.0 or higher.

4000 திவ்ய ப்ரபந்தம் - பொதுத் தனியன்கள்

வடகலை மடம்
(ஆரம்பம்)

கேஸவாதி க்ருபா பாத்ரம் தீசமாதி குணார்ணவம்
ஸ்ரீசடாரி யதீசாநாம் தேசிகேந்த்ரமஹம் பஜே
ராமாநுஜ தயாபாத்ரம் ஞானவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத்வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்;

தென்கலை
(ஆரம்பம்)

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்

வடகலை முனித்ரயம்
(ஆரம்பம்)

ரமாநுஜ தயாபாத்ரம் ஞானவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத்வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம்;

(இனி அனைவருக்கும் பொது)

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்
அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

யோ நித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம-
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா

பூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத-
ஸ்ரீ பக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிச்ராந்
ஸ்ரீ மத்பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்

 


It is available in dynamic Tamil font at the following address:
http://www.ahobilam.com/tamil/divya-prabandam/pothuthaniyan.htm
-- -------------------------------------------------
If you are not able to see the Tamil text.:
Use xp or higher, Change your browsers view encoding to "Unicode - UTF-8", Use outlook 6.0 or higher.
---------------------------------------------------------------------------------------------

Sunday, August 20, 2006

4000 Divya Prapandams








பொய்கை ஆழ்வார் - முதலாழ்வார்கள் மூவரிலும் முதலானவர்.
பொய்கைதனில் உதித்ததினால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார்.
இவர் முதல் திருவந்தாதி எனும் 100 பாசுரங்கள் பாடியுள்ளார்.